சாவில் சந்தேகம் : இறந்தவர் உடல் தோண்டியெடுப்பு

சாவில் சந்தேகம் : இறந்தவர் உடல் தோண்டியெடுப்பு
X

தேனி அருகே 87 வயது முதியவர் சாவில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது உடல் 38 நாட்களுக்குப் பின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடி அருகே சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிந்தலைச்சேரி கிராமத்தில் கடந்த நவம்பர் 15ம் தேதி சலேத் (87) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்ததாக கூறி உறவினர்கள் முன்னிலையில் அவரது உடல் சிந்தலைசேரி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு கல்லறையும் கட்டப்பட்டு விட்டது.

இறந்த சலேத் என்பவருக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனான உவரி அந்தோனி குஜராத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். உவரி அந்தோனியின் மகன் மருத்துவர் எபினேஷ் என்பவர் தேவாரம் காவல் நிலையத்தில் தனது தாத்தாவின் சாவில் மர்மம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் 38 நாட்களுக்கு பிறகு இன்று உறவினர்கள் முன்பாக கல்லறையில் அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டு வட்டாட்சியர் உதயராணி முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

உடற்கூராய்வு அறிக்கை வந்தபின் மேல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார். எப்போதும் இல்லாத வகையில் தங்கள் ஊரில் கல்லறையில் இருந்து 87 வயது முதியவர் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அக்கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story