முதல்வரிடம் தலா ரூ.1 லட்சம் காசோலை பெற்ற தேனி மாவட்ட இரட்டைய சிறுமிகள்
தேனி மாவட்டத்தை சேர்ந்த இரட்டைய சிறுமிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காசோலை வழங்கினார்.
தேனி மாவட்டம் மறவப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தமிழ் சாலினி, முத்தமிழ் சாமினி. இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள். இந்த இரட்டைய சிறுமிகள் திருக்குறள்,திருப்பாவை, தொல்காப்பியம், திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டிகளில் மாநில அளவில் பல்வேறு விருதுகளை பெற்று உள்ளனர்.
இது பற்றிய தகவல் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் மீது பற்று கொண்டுள்ள அந்த சிறுமிகளின் திறமையை பாராட்டியும், அவர்களது தமிழ் இலக்கண திறனை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களை சென்னைக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் வரவழைத்தார்.
அந்த சிறுமிகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதல்வர் வழங்கி பாராட்டினார். அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu