உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர்: மாணவி பிரிஷா சாதனை

உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர்: மாணவி பிரிஷா சாதனை
X
திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி பிரிஷாக்கு, "உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியருக்கான" சான்றிதழை மத்திய அரசு வழங்கி சிறப்பித்துள்ளது.

11வயதாகும் டாக்டர் கே.பிரிஷா, மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேச யோகாசன போட்டிகளில் பங்கேற்று 200க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இளம் வயதில் முனைவர் பட்டம் உலகிலேயே முதன்முதலாக பெற்றவர் பிரிஷா.


இத்தனை சிறப்பிற்கும் உரியவரான இவர் திருநெல்வேலியைச் சார்ந்தவர். நெல்லை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் தொழிலதிபர் கார்த்திகேயன், வழக்கறிஞர் தேவிப்பிரியாவின் மகள் கே.பிரிஷா.

11வயதாகும் பிரிஷா, மீனா சங்கர் வித்யாலயாவில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது இரண்டு வயதிலிருந்து தன் பெற்றோர்கள் மற்றும் பாட்டியிடமிருந்து யோகாசனங்கள் கற்று வருகிறார். இவர் தனது தந்தையின் ஊக்கத்தால் இதுவரை 41 உலக சாதனைகள் செய்துள்ளார். உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனைகள் யோகாவிலும், நீச்சலிலும் செய்துள்ளார். இதற்கான சான்றிதழை குளோபல் யுனிவர்சிட்டி U.S.A வழங்கியுள்ளது.

உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர் சான்றிதழை NCPCR மத்திய அரசு இவருக்கு வழங்கி உள்ளது. 41 உலக சாதனைகள் செய்துள்ள பிரிஷா தன்னைப் போலவே மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏழை மாணவர்கள், பார்வையற்ற மாணவர்கள், ஊனமுற்றவர்கள், முதியோர்கள் எய்ட்ஸ் விடுதியில் இருப்பவர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மற்றும் N.C.C மாணவர்களுக்கு மூன்று வருடங்களாக இலவசமாக யோகா வகுப்புகள் எடுத்து வருகிறார்.


பிரிஷாவின் முயற்சியால் பார்வையற்றோர் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர் கணேஷ்குமார் என்பவரை உலக சாதனை செய்ய வைத்தார். உலகின் முதன் முதலில் உலக சாதனை படைத்த பார்வையற்ற மாணவர் இந்த கணேஷ்குமார் தான். பிரிஷா இதுவரை மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேச யோகாசன போட்டிகளில் பங்கேற்று 200க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். மலேசியா, மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடைபெற்ற சர்வதேச யோகாசனப் போட்டிகளில் தங்கங்கள் வென்று உலக சாம்பியன்கள், பட்டங்கள் வென்றுள்ளார்.

இளம் சாதனையாளர் 2017, 2018, 2019, 2020 மற்றும் சக்சஸ் விருது 2020 மலேசியாவில் லிட்டில் யோகா ஸ்டார் விருது, அன்னை தெரசா விருது, அப்துல்கலாம் விருது, பாரதி கண்ட புதுமைப்பெண் விருது, யோகா ராணி, யோககலா, யோகஸ்ரீ, ஆசனா ஸ்ரீ, யோக ரத்னா, இளம் சாதனையாளர், லிட்டில் சாம்பியன், யங் அச்சீவர் அவார்டு, பீஸ் அவார்டு போன்ற பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர்.

திருநெல்வேலியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா இளையோர் அமைப்பு சார்பில் நடைபெற்ற யோகாசன போட்டியில் பிரிஷாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்து கௌரவப் படுத்தியுள்ளனர். நேஷனல் யூத் பெஸ்டிவல் 2020 -2021 மத்திய அரசின் யோகா போட்டியில் நடுவராக பங்கேற்றுள்ளார்.

"யோகா இன்றே செய்வோம், இன்பம் பெறுவோம்". என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் . இந்த புத்தகத்தை இதயம் நல்லெண்ணெய் உரிமையாளர் வி.ஆர்.முத்து அச்சிட்டு வெளியிட்டார் . இவர் கொரோனா காலத்திலும் ஆன்லைன் மூலம் யோகா வகுப்பு எடுத்து வருகிறார்.


பிரிஷா யோகாசனங்களில் மட்டுமல்லாமல் கிராஸ் போ சூட்டிங்கில் மாநில மற்றும் தேசிய அளவில் தங்கம் வென்றுள்ளார். கராத்தேவில் ப்ளூ பெற்றுள்ளார் . ஆல் இந்தியா கராத்தே போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இவர் டென்னிஸ், பூப்பந்து, ஸ்கேட்டிங், கீ போர்டு, கித்தார், ரூபிக்ஸ் கியூப், இசை ,நடனம், ஓவியம் போன்றவற்றிலும் கல்வியிலும் சிறந்து விளங்குகிறார். இவரை பாண்டிச்சேரி கவர்னர் திருமதி. கிரண்பேடி அவர்களும், பாண்டிச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களும் பலமுறை மேடைகளில் பாராட்டி கௌரவித்து உள்ளார்கள் . பிரிஷாவை பற்றி போட்டித்தேர்வுகளில் படிப்பது நம் இந்திய நாட்டிற்கே பெருமை. கவர்னர் திருமதி. கிரண்பேடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரிஷாவின் புகைப்படத்தை பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
why is ai important to the future