நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு
X

Naam Tamilar Party coordinator Seeman, police have registered a case- நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (கோப்பு படம்)

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Naam Tamilar Party coordinator Seeman, police have registered a case- மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலானது.

அவர் பேசுகையில், "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்ல என்றார். தொடர்ந்து சீமான் பேசுகையில், கிறிஸ்தவம், இஸ்லாமியம் குறித்து, சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாற நடிகர் ராஜ்கிரண், "இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையை விட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம். இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, சிலர் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" எனத் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.

நடிகர் ராஜ்கிரண் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "அவர் வயதில் பெரியவர், நான் மதத்தை பற்றிப் பேசிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் என்னுடைய முழு பேச்சை கேட்டாரா எனத் தெரியவில்லை. சிறிய காணொளியை மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுக்கக் கூடாது. அவருக்கு என்னை திட்டுவதற்கோ, கோபப்படுவதற்கோ உரிமை இருக்கிறது" என்றார். இதையடுத்து நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரை குறிப்பிட்டுப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் பெரும்பான்மை, சிறுபான்மை குறித்தும் சீமான் சில விளக்கங்களை கூறியிருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து, கடந்த ஜூலை 30 -ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியதாகக் கூறி, திராவிட நட்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil