வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67,76,945

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67,76,945
X

வேலைவாய்ப்பு அலுவலகம்(மாதிரி படம்)

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 என தகவல் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67,76,945

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 என தகவல் வெளியாகியுள்ளது.

58 வயதுக்கும் மேலானவர்கள் 10,907 பேர் காத்திருப்பு. இளங்கலையில் கலை மற்றும் அறிவியல் படித்தவர்கள் அதிக அளவிலும், முதுகலையில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அதிகமாகவும் காத்திருப்பவர்கள் என தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கையில் 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 14 லட்சத்து ஆயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று நான்கு பேரும், 19 வயது முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16 லட்சத்து 49 ஆயிரத்து 473 பேரும், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் மேலை நாட்டவர்கள் 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 பேரும், முப்பத்தாறு வயது முதல் 52 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 பேரும் 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்து 907 பேர் என மொத்தம் 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு பெற்றவர்களாக உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

அதேபோல கடந்த 30--06- 21ம் தேதி வரை நிலவரப்படி மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 515 பேர், இதில் கைகால் குறைபாடு உடையவர்கள் ஆண் பெண் இருபாலரும் சேர்த்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்த 141 பேரும், விழிப்புலன் இழந்தவர்கள் இருபாலரும் சேர்த்து 16 ஆயிரத்து 525 பேரும், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் ஆண் பெண் இருபாலரும் சேர்த்து13 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 515 பேர் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுதாரர்களாக உள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!