அ.தி.மு.க.வில் அடுத்த பரபரப்பு: சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். தம்பி ராஜா

அ.தி.மு.க.வில் அடுத்த பரபரப்பு: சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். தம்பி ராஜா
X
சசிகலாவை ஓ.பி.எஸ். தம்பி ராஜா சந்தித்து இருப்பது அ.தி.மு.க.வில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வி.கே.சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற ரகசிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அ.தி.மு.க.வில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இதுவரை நேரடியாக கருத்துக்கள் எதுவும் கூறவில்லை என்றாலும் சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய கூட்டம் நடத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து வி. கே. சசிகலா தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர் அ.தி.மு.க. தொண்டர்களை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார் .

இந்த பரபரப்பான சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது அ.தி.மு.க.வில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture