சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு.

சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு.
X

சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக கடந்த 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட 234 பேரும் எம்எல்ஏக்களாக இன்று (11ம் தேதி) பதவியேற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இதனைத் தொடர்ந்து 12ம் தேதி (நாளை) புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சென்னை, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது ௧௬ வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக தமிழக கவர்னர் எனக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இன்று (11ம் தேதி) அனைத்து உறுப்பினர்களும் பதவி ஏற்கும் வரை எனது பணி தொடரும். புதிய சபாநாயகர் வரும் வரை தற்காலிக இரண்டு நாட்கள் நான் சபாநாயகராக செயல்படுவேன். காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள், ஒவ்வொரு கட்சி தலைவர்கள் என அனைத்து உறுப்பினர்களுக்கும் அகர வரிசைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் எனவும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெறுகிறது.

கொரோனா தொற்று இருப்பவர்கள் தனியாக வந்து, பிறகு சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொள்வார்கள். எத்தனை நாளில் பதவியேற்க வேண்டும் என்று எதுவும் இல்லை. அவர்கள் உடல்நிலை சரியானதும் வந்து பதவியேற்றுக் கொள்வார்கள். அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பதவியேற்க உள்ள எம்எல்ஏக்கள், சட்டமன்ற பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை (Certificate of Election)) உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்பொழுது உறுப்பினர்கள் தவறாமல் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!