/* */

ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ஒத்திவைப்பு

ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.

HIGHLIGHTS

ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ஒத்திவைப்பு
X

ராஜ்பவன்.

ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஆளுநர் மாளிகையில் உள்ள பிரதான புல்வெளிகளில் அதிக மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், இடியுடன் கூடிய கனமழை நாளையும் (15.8.2023) தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

மேற்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டும், விருந்தினர்களுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காகவும், சுதந்திர தின வரவேற்பு 2023 நிகழ்ச்சியை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி கூடிய விரைவில் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Aug 2023 7:33 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23.40 மி.மீ மழை பதிவு
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 124 கன அடியாக அதிகரிப்பு
  4. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு..!
  5. காஞ்சிபுரம்
    கருத்து கணிப்புகளை ஏற்கவோ அல்லது புறந்தள்ளி விடவோ முடியாது..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. கல்வி
    அரசு மாணவர்களுக்காக 37 லட்சம் வங்கிக் கணக்குகள்: அஞ்சல் துறையுடன்...
  8. திருவண்ணாமலை
    கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு...
  9. ஈரோடு
    அறச்சலூர் நவரசம் கல்லூரியில் சக்ரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான செஸ்...
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 9ம் தேதி குரூப் 4 தேர்வு: 51,433 தேர்வர்கள்...