/* */

இந்து விரோத போக்காக கோவிலை இடிக்க முயற்சி : இந்து முன்னணியினர் புகார்

இந்து விரோத போக்காக கோவிலை இடிக்க முயற்சிப்பதாக இந்து முன்னணியினர் புகார் தெரிவித்துள்ளனர்..

HIGHLIGHTS

இந்து விரோத போக்காக கோவிலை இடிக்க முயற்சி : இந்து முன்னணியினர் புகார்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட மீரான்சேட் பகுதியில் உள்ள கோவிலை அகற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

சங்கரன்கோவில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்து விரோத போக்காக கோவிலை இடிக்க முயல்வதாக இந்து முன்னணியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் உருவாக்கி வழிபட்டு வரும் மாரியம்மன் கோவிலை நகராட்சி நிர்வாகம் திடீரென அகற்ற முயன்றது. திமுக ஆட்சியமைத்தவுடன் இந்து விரோத போக்கை கையாள்வதாக கூறி இந்து முன்னணியினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட மீரான்சேட் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் மாரியம்மன் கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென அப்பகுதிக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் இக்கோயில் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டு இருப்பதாகக் கூறி கோவிலை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடங்கினர் . தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறும்போது நாங்கள் 5 வருடங்களாக நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யபட்ட இடங்களை அகற்ற கோரி மனு அளித்தோம் ஆனால் அதன் மீது தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ஏன் இங்கு உள்ள கோவிலை அகற்ற நகராட்சி ஆணையாளர் ஆர்வம் காட்டுகிறார் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்து விரோத போக்காக கோவிலை இடிக்க துணை போவதாக கூறி காவல் துறை அதிகாரிகள் இடம் கேள்வி எழுப்பினார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி அதிகாரிகள் அகற்ற வந்த மாரியம்மன் கோவில் முன்பு அமர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்

Updated On: 9 May 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி