/* */

இன்னும் சில மாதங்களில் அறநிலையத் துறையின் பொற்காலம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதுவரைக்கும் இல்லாத வகையிலே, திருக்கோயில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அதுதான் மிக மிக முக்கியமான ஒன்று - மு.க.ஸ்டாலின்.

HIGHLIGHTS

இன்னும் சில மாதங்களில் அறநிலையத் துறையின் பொற்காலம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், திருக்கோயில் பூசாரிகளுக்கு இன்று மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகளை பாராட்டி பேசிய முதலமைச்சர் கூறியதாவது:

கோவில் நிலங்கள் மீட்கப்படுகின்றன, கோவில் சொத்துக்களும் மீட்கப்படுகின்றன. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தமிழில் வழிபாடு செய்யப்படக்கூடிய ஒரு அற்புதம் இந்தத் துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இறைவனைப் போற்றும் போற்றிப் பாடல் புத்தகங்கள் வெளியாகி உள்ளது.

அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிதி தரப்பட்டுள்ளது. பதினைந்து வகையான பொருட்கள் தரப்பட்டுள்ளது. ஏராளமான கோயில் திருப்பணிகள் நடக்க இருக்கிறது. புதிய தேர்கள் வலம் வரப் போகின்றன. அதுமட்டுமல்ல, இதுவரைக்கும் இல்லாத வகையிலே, திருக்கோயில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அதுதான் மிகமிக முக்கியமான ஒன்று.

அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்குக் குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டால் அறநிலையத் துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப் போகிறது, அந்தக் காட்சியை நாம் எல்லாம் பார்க்கப் போகிறோம்.

அந்த வரிசையில் இன்றைய நாள், ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். இதன்மூலமாக அரசுக்கு ஆண்டு தோறும் 13 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும் இதைச் செலவு என்று நான் சொல்ல விரும்பவில்லை.

இதன் மூலமாக ஏறத்தாழ 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறோம். ஒருகால பூஜை நடக்கும் கோயில்களுக்கான வைப்பு நிதி 2 இலட்சம் ரூபாயாக அதிகரித்தும் தரப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஒருகால பூஜை நடக்கும் கோயில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குப் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளின் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நான் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறேன்.

'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள் இன்றைக்கு மகாகவி பாரதியாரின் நினைவு நாள் ஆகும். சிறியரை மேம்படச் செய்தால் – பின்பு எல்லோரையும் தெய்வம் வாழ்த்தும்' என்று மகாகவி பாரதி எழுதினார். அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. சட்டமன்றக் கூட்டத் தொடர் வருகிற 13ஆம் தேதி முடிய இருக்கிறது. அதன்பிறகு சட்டமன்றத்தில் என்னென்ன அறிவிப்புகளை செய்திருக்கிறோமோ, அவற்றை எல்லாம் படிப்படியாக ஒவ்வொன்றாக நிறைவேற்ற அதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்து இருக்கிறோம் வெறும் அறிவிப்போடு எந்தத் திட்டமும் நின்றுவிடாது, அதனை மாதந்தோறும் நானே கண்காணிக்கப் போகிறேன்.

மேலும் அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே கண்காணிக்க போகிறேன். ஒவ்வொரு திட்டங்களுக்கும் நான் முன்னுரிமை கொடுத்து, அதையெல்லாம் நிறைவேற்றுகின்ற முயற்சியிலே நிச்சயம் நான் ஈடுபடப் போகிறேன். என்று முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Updated On: 11 Sep 2021 3:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?