5,000 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு பாடம் நடத்த 5,000 சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அங்கன்வாடி மையங்களுடன் இணைந்து செயல்படும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் வகுப்புகளில் பாடம் நடத்த சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 2,381 பள்ளிகளில் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை நடத்த 5,000 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கப்படவுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக, 2,500 ஆசிரியர்களை உடனடி நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பள்ளிக் கல்வி துறை நடத்தும், தொடக்க கல்வி டிப்ளமா படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu