6 புதிய மாவட்டங்களில் ஊழல் தடுப்பு அலுவலகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

6 புதிய மாவட்டங்களில் ஊழல் தடுப்பு அலுவலகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்
X

6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார், நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உடனிருந்தார். 

ரூ.2.93 கோடி மதிப்பீட்டில், 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மனித வள மேலாண்மை துறை சார்பில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

2021-22ஆம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையில், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு. திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் ஆறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் அறிவிக்கப்பட்டது. பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அதன்படி, மனித வள மேலாண்மைத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு. திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூடுதல் தலைமைச் செயலாளர்/ விழிப்புப்பணி மற்றும் நிருவாகச் சீர்திருத்த ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சிவ்தாஸ் மீனா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் இயக்குநர் ப.கந்தசாமி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil