திருவையாறு: 6 பேருக்கு கொரோனா

திருவையாறு: 6 பேருக்கு கொரோனா
X
திருவையாறு பகுதியில் இன்று 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவையாறு வடக்கு வீதியில் ஒருவருக்கும், கல்யாணபுரத்தில் ஒருவருக்கும், வரகூரில் ஒருவருக்கும், கருப்பூரில் ஒருவருக்கும், கழுமங்கலத்தில் ஒருவருக்கும், செம்மங்குடியில் ஒருவருக்கும்; ஆக மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 6 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், திருவையாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று தெருக்கள் முழுவதும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடுபத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்துகொள்ளவும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!