பட்டுக்கோட்டை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

Pattukkottai Rowdy List
X

Pattukkottai Rowdy List

Famous rowdy hacked to death near Pattukottai-பட்டுக்கோட்டை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

Famous rowdy hacked to death near Pattukottai-பட்டுக்கோட்டை கடைத்தெரு பகுதியில் நடந்து சென்ற பிரபல ரவுடியை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி(35).கூலிப்படை தலைவனான சிரஞ்சீவி மீது தஞ்சாவூர் உட்பட பல காவல் நிலையங்களில் கொலை,கொள்ளை போன்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பெரிய கடை தெரு பகுதியில் சிரஞ்சீவி நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து தப்பியோடி விட்டனர்.

இதில் வெட்டுப்பட்ட சிரஞ்சீவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிரஞ்சீவிக்கும், சில கூலிப்படையினருக்கும் முன்விரோதம் இருந்து வரும் நிலையில், அவரை கூலிப்படையை சேர்ந்தவர்கள் வெட்டியதாக கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!