மாஜி அமைச்சர் தங்கமணி எங்கே? சோதனைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு

மாஜி அமைச்சர் தங்கமணி எங்கே? சோதனைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு
X
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு, உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் என, அவர் தொடர்புடைய 69, இடங்களில் இன்று காலை முதல், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி, அந்த வீட்டில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. தங்கமணியின் மகன் தரணிதரன், சென்னையில் இருப்பதாகவும் தெரிகிறது.

இதனிடையே, லஞ்ச ஒழிப்பு சோதனை நடக்கும் தகவல் அறிந்ததும், அதிமுகவினர் தங்கமணியின் வீட்டுக்கு முன்பாக திரண்டு, சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சோதனை நடைபெறும் இடத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டவாறே உள்ளனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது :    துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு
குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
ai future project