கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்: பயணிகள் குளிப்பதற்கு அதிரடி தடைவிதிப்பு..!
கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்ட கடுமையான கடல் சீற்றம்.
கடந்த 2004 டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு ,கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலைகள் இன்றி அமைதியாக இருப்பது போன்ற மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி கடற்பகுதியில் இன்று காலை11மணி அளவில் பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. இதனால் கடல் பயங்கர சீற்றமாக காணப்பட்டது. நடுக்கடலில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வந்தன. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதேபோல,கோவளம்,சின்னமுட்டம்,ஆரோக்கியபுரம்,வாவத்துறை,கீழமணக்குடி,மணக்குடி,பள்ளம்,சொத்தவிளை,வட்டக்கோட்டைபீச்,ராஜகமங்கலம்துறை போன்ற இடங்களில் கடல்சீற்றம் காணப்பட்டது.இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu