புளியங்குடி அருகே தண்ணீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்!

புளியங்குடி அருகே தண்ணீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்!
X

பட விளக்கம்: தண்ணீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்

புளியங்குடி அருகே தண்ணீர் கேட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புன்னையாபுரம் ஊர் பொதுமக்கள் முந்தல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் தங்கள் பகுதிக்கு மட்டுமே கிடைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீஸ் குறிப்பு பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி முந்தல் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

இந்தநிலையில் புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் கிராமத்தில் தண்ணீர் பற்றாகுறை இருந்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இருப்பினும் முந்தல் பகுதியில் இருந்து வரும் தண்ணீரை பங்கீடு செய்வதில் புன்னையாபுரம்-திருவேட்டநல்லூர் கிராமங்களுக்கு இடையே நீண்ட நாள்களாக பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே முந்தல் பகுதியில் இருந்து வரும் தண்ணீரை தங்கள் பகுதிக்கு மட்டும் பங்கீடு செய்ய வேண்டும் எனவும் தங்களுக்கு தண்ணீர் பற்றாகுறை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே தங்கள் பகுதிக்கு மட்டுமே இந்த தண்ணீர் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .மேலும் நீதி மன்றம் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் இரண்டு கிராம விவசாயிகளும் நீரை பங்கீடு செய்து கொள்ளலாம் என உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் போதிய அளவு தண்ணீர் இல்லை என்றும் மாறாக மற்ற பகுதிகளில் தண்ணீர் கொடுக்கக் கூடாது இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி புன்னையாபுரம் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே இருதரப்பு விவசாயிகளின் பிரச்சினை தீர்க்கும் வகையில் தண்ணீர் வழங்குவது என உத்தரவு போடப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தங்கள் பகுதிக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்க வேண்டும் என புன்னையாபுரம் கிராம மக்கள் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .மேலும் எந்த அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏராளமான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்