வாசுதேவநல்லூர்: கரும்பு தோட்டத்தில் பிடிப்பட்ட 10 அடி நீள மலைபாம்பு!

வாசுதேவநல்லூர்: கரும்பு தோட்டத்தில் பிடிப்பட்ட 10 அடி நீள மலைபாம்பு!
X

பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு.

வாசுதேவநல்லூரில் விவசாய நிலத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கோடங்கி தெருவை சேர்ந்தவர் அய்யர். விவசாயியான இவருக்கு பெரியகுளம் குளத்து புரவில் விவசாய நிலம் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டு தற்போது கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. கரும்பு வெட்டும் போது சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக வாசுதேவநல்லுர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சேக்அப்துல்லா தலைமையில் வீரர்கள் மாடசாமிராஜா, மணிவண்ணன், கதிரேசன் ஆகியோர் விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் கிடந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அடர் காட்டுப் பகுதியில் கொண்டுசென்று பாம்பை விட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!