சங்கரன்கோவில் அருகே இறந்த நபருக்கு தடுப்பூசி சான்றிதழ்: குடும்பத்தினர் அதிர்ச்சி
இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து போன கூலி தாெழிலாளி மாரியப்பன்.
சங்கரன்கோவில் அருகே இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் அளித்த சுகாதரத்துறையினரால் பரபரப்பு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியங்குடி செக்கடி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (62) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி இசக்கியமாள்(55) மகன் மாரிசெல்வம் (24) ,ஆகியோர் உள்ளனர். இவர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி கோவிட்ஷீல்ட் 13-08-21 அன்று புளியங்குடியில் நடைபெற்ற முகாமில் போட்டு கொண்டார்.
இவருக்கு கடந்த பல வருடங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. தொடர்ந்து இவரது உடல்நிலை மோசமாகவே சிகிச்சைக்காக இவரது மகன் மாரிசெல்வம். கடந்த 08-10-21 தேதி அன்று புளியங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை பலனளிக்காமல் இவர் அன்றைய தினமே இறந்து விட்டார். உறவினர்களின் துணையோடு அவரது இறுதி சடங்கு முடிந்தது. மேலும் மாரிசெல்வம் நகராட்சியில் தந்தையின் இறப்பை பதிந்து இறப்பு சான்றிதழும் பெற்று கொண்டார்.
இந்நிலையில் நேற்று [04-12-21] திடிரென அவரது மொபைலுக்கு இறந்து போன தந்தை மாரியப்பன் கொரோனா தடுப்பூசி கோவிட்ஷீல்ட் இரண்டாம் தவணை போட்டு கொண்டதாக தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரி செல்வம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது ஏதோ தெரியாமல் வந்து இருக்கும் அதனை பெருசு பண்ண வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதில் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது.
தடுப்பூசி போட்டவர்களுக்கு முறையான சான்றிதழ் வருவதில்லை. போடாதவர்களுக்கு போட்டதாக சான்றிதழ் வருவதுண்டு. ஒருபக்கம் அரசாங்கம் பல கோடி செலவழித்து தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக கொடுகிறது. மறுபக்கத்தில் தடுப்பூசிகளை போடாமலே போட்டதாக கணக்கு காட்டப்படுகிறது. யாரை ஏமாற்ற இது போன்ற தவறான எண்ணிக்கைகளை அரசாங்கத்திற்கு கொடுக்கிறார்கள். மக்களுக்கு போடாத தடுப்பூசிகள் எங்கு யாருக்காக அனுப்பப்படுகிறது என்று சமுகஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu