புளியங்குடியில் ஊரணி ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புளியங்குடியில் ஊரணி ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
X

புளியங்குடியில் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வரும் ஊரணி.

புளியங்குடியில் நீர்ப்பிடிப்பு ஊரணியை ஆக்கிரமிப்பு செய்யும் சமூக விரோதிகள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி 7வது வார்டில் வாட்டர் டேங்க் அருகிலுள்ள ராஜராஜேஸ்வரி மடத்துக்குச் சொந்தமான ஊரணி உள்ளது. பல ஆண்டு காலமாக கோவில் திருவிழா காலங்களில் முளைப்பாரியை நீரில் விடுவதற்காகவும் மற்ற நேரங்களில் ஆடு மாடுகள் தண்ணீர் குடிப்பதற்காக வும் இந்த ஊரணி செயல்பட்டு வந்தது. தற்போது ஆடு மாடுகள் மட்டும் தண்ணீர் அருந்தி வருகிறது.

இந்நிலையில் இந்த ஊரணி அருகே வீடுகள் கட்டுவோர் யாருக்கும் தெரியாமல் மண்ணை திருட்டுத்தனமாக அடித்து இந்த ஊரணியை அழித்து வருகின்றனர். இது சம்பந்தமாக வரி செலுத்துவோர் உரிமை பாதுகாப்பு நலச்சங்க துணைச் செயலாளர் சங்கர் கூறும்போது நீர்நிலைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே அறிவித்துள்ளது. தமிழக அரசும் இதை கவனத்தில் கொண்டுள்ளது.

இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளேன், மற்றும் உள்ளூர் விஏஓ தாசில்தார் ஆகியோருக்கும் புகார் அளித்துள்ளேன். அதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுபற்றி விஏஓ மாரியப்பனிடம் கேட்டபோது நான் புதிதாக பதவி ஏற்று உள்ளேன். அதனால் அந்தப் பகுதியை நேரடியாக பார்த்துவிட்டு நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

Tags

Next Story
ai business to start