காட்டெருமைகளின் மாமிசத்தை விற்பனை செய்த இருவர் கைது: வனத்துறையினர் அதிரடி

காட்டெருமைகளின் மாமிசத்தை விற்பனை செய்த இருவர் கைது: வனத்துறையினர் அதிரடி
X

புளியங்குடி பகுதியில் திருட்டு மின்வேலி அமைத்து காட்டெருமையை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்த அப்துல் வஹப், முகமது நாகூர் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

புளியங்குடி பகுதியில் திருட்டு மின்வேலி அமைத்து காட்டெருமையை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்த இருவர் கைது.

புளியங்குடி பகுதியில் திருட்டு மின்வேலி அமைத்து காட்டுமாடு ஒன்றினை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்த இருவரை கைது செய்து புளியங்குடி வனத்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டத்தின் அருகே காட்டு மாடு ஒன்றின் தலை மற்றும் கால்கள் கிடப்பதாக புளியங்குடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்த போது தோட்டத்தில் திட்டுத்தனமாக மின்வேலி அமைத்து காட்டுமாடு ஒன்றினை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்த அப்துல் வஹப் (43) மற்றும் முகமது நாகூர் ஆகிய இருவரை கைது செய்து புளியங்குடி வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story