குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு
X

தென்காசி அருகே நேரிட்ட விபத்தில் சிக்கிய கார் 

மதுரையிலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கார் சிவகிரி அருகே விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

மதுரையிலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கார் சிவகிரி அருகே விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மதுரை செல்லூர் பகுதியிலிருந்து சுரேஷ், மன்சூர் அலிகான், பிரபு,பேச்சிமுத்து, ஜான்சன் ,வாசக மணி அருண்குமார், மகேஷ், அருண்குமார் ஆகியோர், குற்றாலத்தில் உள்ள தனியார் அருவியில் குளிப்பதற்காக நண்பர்களுடன், மதுரையிலிருந்து குற்றாலம் புறப்பட்டனர். நள்ளிரவில் கார் சிவகிரி அருகே உள்ள வளைவில், வேகமாக வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் காரை ஒட்டிவந்த மன்சூர் அலிகான், பிரபு, சுரேஷ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து, சிவகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை கொண்டதில், காரில் பயணம் செய்த அனைவரும் மது போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!