புளியங்குடி அருகே டிராக்டர் திருடிய மூன்று பேர் கைது!

புளியங்குடி அருகே டிராக்டர் திருடிய மூன்று பேர் கைது!
X

பட விளக்கம்: புளியங்குடி அருகே டிராக்டர் செய்ய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதை படத்தில் காணலாம்.

புளியங்குடி அருகே டிராக்டர் திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

புளியங்குடி டிராக்டரை திருடியதாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த டிராக்டர் பறிமுதல் செய்தனர்,

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணி பகுதியை சேர்ந்த புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் சாமிதுரை. கடந்த 23ஆம் தேதி தனக்கு சொந்தமான டிராக்டரை தனது அலுவலகத்திற்கு பின்புறம் நிறுத்தி வைத்திருந்தபோது காணாமல் போனதாக புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

நேற்று டிராக்டரை ஓட்டிக்கொண்டு சிந்தாமணிக்கு வந்தனர். அப்போது வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரனண செய்தனர். அப்போது மூன்றுபேரும் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். காவல்துறையினரின் கிடுக்குப் பிடி விசாரணையில் சிந்தாமணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுரேஷ் (23) ஆகாஷ் குமார்(25) வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வன்னியராஜ் (25) ஆகிய 3 பேர் டிராக்டரை எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் டிராக்டரில் பின்புறம் உள்ள டிப்பர் பகுதியை தென்காசி அருகே உள்ள மத்தளாம்பாறையில் கழற்றி நிறுத்திவிட்டு டிராக்டரை மட்டும் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதனிடையே சுரேஷ், வன்னியராஜ், ஆகாஷ் குமார் மூன்று பேரும் அந்த டிராக்டரை மதுரை,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்க முயன்றதாக கூறப்பட்டது.

மேலும் அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஆகாஷ் குமார் மீது கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு இருப்பதால் மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்