பள்ளிக்கூடத்தில் திருடிய மூன்று நபர்கள் கைது

பள்ளிக்கூடத்தில் திருடிய மூன்று நபர்கள் கைது
X

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட TN புதுக்குடியில் செல்வ பிரகாஷ் என்பவர் ஒரு தொடக்கப்பள்ளியை நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது பள்ளியில் இருந்த இரும்பு கதவு,ஆங்கில்கள் மற்றும் ஆஸ்பிட்டாஸ் சீட்டுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்ததார்.

காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் அமல்ராஜ்@பொண்ணு(27), தங்கசாமி என்பவரின் மகன் கருப்பசாமி@செல்வம்(33) மற்றும் ரூபன் என்பவரின் மகன் விபின் குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!