புளியங்குடியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

புளியங்குடியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா  கொண்டாட்டம்
X

பெண் காவலர் உறியை அடிக்க முயன்ற போது எடுத்த படம்.

புளியங்குடியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டும், மகளிர் தின விழாவினை முன்னிட்டும் பெண்களுக்கான கோலப்போட்டி, உரி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பல்வேறு வகையாக கலர் கோலங்கள் வரைந்த சூழலில் சிறப்பாக வரையப்பட்ட கோலங்களுக்கு பரிசு தொகை வழங்கப்பப்பட்டது. தொடர்ந்து, பெண்களுக்கான உரியடி போட்டி நடைபெற்ற சூழலில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களும் உறியடிக்க முயற்சி செய்தனர்.

ஆனால், எந்த பெண்களும் உரிப்பானையை உடைக்க முடியாத காரணத்தினால், இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர் ஒருவர் தானும் ஒரு பெண்தான் எனக் கூறியபடி, கண்ணில் துணியை கட்டி உரியை அடிக்க முயற்சி செய்தார். அப்பொழுது ஒரே முயற்சியில் உரிப்பானையை அடித்து நொறுக்கினார்.

இதை பார்த்த சக பெண்கள் மட்டும் கூடியிருந்தவர்கள் பெண் காவலரை பாராட்டியதுடன், பல பெண்கள் முயற்சி செய்தும் உடைக்க முடியாத பானையை ஒரே முயற்சியில் பெண் காவலர் உடைத்தது அனைவரது பாராட்டுகளையும் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Tags

Next Story