புளியங்குடியில் தெருநாய்களை அப்புறப்படுத்த காேரி எஸ்டிபிஐ கட்சியினர் மனு
புளியங்குடி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வெறிபிடித்து திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
புளியங்குடி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வெறிபிடித்து திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டி புளியங்குடி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
புளியங்குடி நகரின் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. சில நேரங்களில் இந்த நாய்களால் பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. ஏற்கனவே கடந்த ரமலான் மாதத்தில் புளியங்குடி நகரின் கோட்டைமேட்டுத் தெருவில் உள்ள ஒரு சிறுவனை தெருநாய்கள் கடித்ததன் விளைவாக அந்தச் சிறுவன் பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது ஊருக்கு அருகில் உள்ள கடையநல்லூரில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் வெறிகொண்டு கடித்ததினால் 7 வயது சிறுவன் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டு தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
எனவே மேற்கொண்டு இந்த தெருநாய்களால் யாரும் பாதிக்கப்படாத வண்ணம் நகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று புளியங்குடி நகர எஸ்டிபிஐ கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டது. மனுவை புளியங்குடி எஸ்டிபிஐ கட்சியின் நகரத் தலைவர் N.தமீம் அன்சாரி அவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது.
இந்நிகழ்வில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அகமது புளியங்குடி நகரச் செயலாளர் அப்பாஸ், நகரப் பொருளாளர் நஸீர், மேற்குக் கிளைத் தலைவர் ஷேக் முகம்மது மற்றும் ராஜா முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu