மாநில அளவிலான சிலம்பு போட்டி: வாசுதேவநல்லூர் குழுவினர் தங்கம் வென்று சாதனை
சென்னையில் நடைபெற்ற மாநில சிலம்பு போட்டியில் தேசியம் பட்டி தேசிய தெய்வீக சிலம்பு கழகம் இளைஞர்கள் சாதனை.
சென்னை பூந்தமல்லி மேவலுர்குப்பம் அப்பல்லோ பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பு போட்டி நடைபெற்றது. போட்டியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டி என்ற நாரணபுரத்தைச் சேர்ந்த தேசிய தெய்வீக சிலம்ப குழு இளைஞர்கள் பயிற்சியாளர் வேலுச்சாமி தலைமையில் எஸ்.கணேஷ் குமார், எ.அருண்குமார், வி.அருண்குமார், எம்.அருண்குமார், எஸ்.சுபாஸ், கா.ராஜ்குமார் ஆகியோர்கள் சிலம்பு போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசாக 17 தங்க பதக்கங்களும், இரண்டாம் பரிசாக 8 வெள்ளி பதக்களும், மூன்றாம் பரிசாக 2 பித்தளை பதக்கங்களும் பெற்றுள்ளார்கள்.
நேற்று காலையில் ஊருக்கு வந்த சிலம்பு போட்டியில் வெற்றி இளைஞர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக ஊரின் எல்லையில் இருந்து பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். தொடர்ந்து சிலம்பாட்ட குழு இளைஞர்கள், சிறுவர்கள் சிலம்பு விளையாடியபடி ஊரைச் சுற்றி வலம் வந்தனர். அப்போது ஆங்காங்கே பெண்கள் உற்சாகத்துடன் ஆராத்தி எடுத்து குலவையிட்டு சிலம்பு போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு நெற்றியில் திலகமிட்டனர்.
இறுதியாக வெற்றிபெற்ற வீரர்கள் பேரூர்ந்து நிலையம் அருகில் பொதுமக்கள் மத்தியில் சிலம்பு விளையாடி தாங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த சுற்றுவட்டார பொதுமக்கள், வாகனங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும் வெகுவாக பாராட்டினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu