சிவகிரி: தற்காலிக நெல்கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

சிவகிரி: தற்காலிக நெல்கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
X
சிவகிரியில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

சிவகிரி: தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தினை வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ சதன் திருமலைகுமார் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி, புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். தாங்கள் சாகுபடி செய்த நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.

இதனை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் திறந்து வைத்தார்.இந்த கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 600 முடைகளில் இருந்து 700 முடைகள் வரை கொள்முதல் செய்யபட உள்ளதாகவும், விவசாயிகள் பட்டா, அடங்கல், உள்ளிட்ட ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture