தொடர் கஞ்சா விற்பனை: ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

தென்காசி அருகே தொடர் கஞ்சா விற்பனை ஈடுபட்டு வந்த ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம்,சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சக்திவேல் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிவகிரி காவல் ஆய்வாளர் மனோகரனுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தினார்.

அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் ,மேற்படி குமாரபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் சக்திவேல் (62) என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!