பராமரிப்பின்றி காணப்படும் சங்க கால இலக்கிய புலவர் நினைவுச் சின்னம்
பட விளக்கம்: பராமரிப்பு இன்றி காணப்படும் சங்க கால இலக்கிய புலவர் நினைவுச் சின்னம்.
வாசுதேவநல்லூர் அருகே சங்க இலக்கிய புலவர் மாங்குடி மருதனாரின் நினைவுத்தூண் மற்றும் கல்லால் ஆன யானை ஆகியவை சேதமடையும் நிலையிலும், அழகு கெட்டும் காட்சியளிப்பதைக் கண்ட பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர். இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அரசை வலியுறுத்துகின்றனர்.
மாங்குடி மருதனார் என்பவர் சங்ககால நல்லிசைப் புலவர்களில் ஒருவர். இவர் பத்துப்பாட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர். மதுரைக் காஞ்சியில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார். வாசுதேவநல்லூர் அருகே அமைந்துள்ள மாங்குடி பகுதியில், சங்க இலக்கிய புலவர் மாங்குடி மருதனாரின் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. அருகே கல்லால் ஆன யானை அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நினைவுத்தூணை சுற்றிலும் திருமண வரவேற்பு பேணர்கள் வைக்கப்பட்டு நினைவுத்தூண் மற்றும் கல்லால் ஆனா யானை சிற்பத்தில் கயிற்றால் யானை தும்பிக்கையில் கட்டியும், தூண்களை சுற்றி அழகுக்காக இருந்த செடி, மரங்களை ஒடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சங்க இலக்கிய புலவர் மாங்குடி மருதனார் புலவரின் புகழை போற்றக்கூடிய தினம் அடுத்த மாதம் 29ம் தேதி அரசு மரியாதை செய்து கொண்டாடக்கூடிய நிலையில் தற்போது மருதனாரின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்து, கயிற்றால் கட்டிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu