புளியங்குடி ஆரியங்காவு கருப்பசாமி கோவில் திருவிழா 500க்கும் மேற்பட்டோர் அக்னி சட்டி எடுத்து வழிபாடு

புளியங்குடி ஆரியங்காவு கருப்பசாமி கோவில் திருவிழா 500க்கும் மேற்பட்டோர் அக்னி சட்டி எடுத்து வழிபாடு
X

பட விளக்கம்: கோவில் திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து வரும் பக்தர்களை படத்தில் காணலாம்

புளியங்குடியில் நடைபெற்ற கருப்பசாமி கோவில் திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் அக்னி கட்டி எடுக்கும் 100க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி வழிபட்டனர்

புளியங்குடி ஸ்ரீ ஆரியங்காவு கருப்பசாமி கோவில் தீமிதி திருவிழாவில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தும், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி வனத்துறை அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆரியங்காவு கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி முதல் தேதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா திருவிழா நேற்று காலை முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.. இதனை தொடர்ந்து மாலையில் தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த தீமிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேல் விரதம் இருந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். புளியங்குடி பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அக்னி சட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து ஸ்ரீ ஆரியங்காவு கருப்பசாமி கோவிலுக்கு கொண்டு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.. மேலும் நேற்று தொடங்கி நடைப்பெற்று வரும் இந்த திருவிழா மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது ...

புளியங்குடி சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் காவல்துறையினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!