புளியங்குடியில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

புளியங்குடியில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
X

புளியங்குடியில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புளியங்குடியில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புளியங்குடி, டிஎன் புதுக்குடியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ‌ ‌

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சியின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில வர்த்தக அணி தலைவர் ராஜா கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், காஷ்மீரில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்தவரா அங்கு இடம் வாங்க முடியாத சூழ்நிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது மோடி அவர்களால் இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தாலும் காஷ்மீரில் இடம் வாங்கலாம் என்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தார். இதேபோன்று எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக கொண்டுவந்த மாபெரும் தலைவராக மோடி திகழ்ந்து வருகிறார். ‌மத்திய அரசின் மூலமாக இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் வீடு 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான திட்டத்தையும் கொண்டு வந்தார் என மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பேசினார். கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story