வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்.

வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 27.05.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை வாசுதேவநல்லூர் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தெரிவு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது www.deotenkasi22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!