வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக பொன்.முத்தையாபாண்டியன் போட்டியின்றி தேர்வு

வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக பொன்.முத்தையாபாண்டியன் போட்டியின்றி தேர்வு
X

வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனாக, வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்.முத்தையாபாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனாக பொன்.முத்தையாபாண்டியன், துணைத் தலைவராக 13வது வார்டு சந்திரமோகன் போட்டியின்றி தேர்வு.

வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்.முத்தையாபாண்டியன் துணைத் தலைவராக 13வது வார்டு திமுக கவுன்சிலர் சந்திரமோகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து, யூனியன் சேர்மன் துணைச் சேர்மன் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து .தேர்தல் நடத்தும் அலுவலர் த.தாமரக்கண்ணன், தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி ஆணையாளர்கள் அ.ஜெயராமன், மா.வேலம்மாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.இராமநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் க.கருத்தப்பாண்டியன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற யூனியன் சேர்மன், மாலை நடைபெற்ற துணை சேர்மன் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. யூனியன் சேர்மன் பதவிக்கு ஆறாவது வார்டு உறுப்பினர் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன் முத்தையா பாண்டியனும் துணைத்தலைவர் பதவிக்கு ஒன்றியத்தில் 13வது வார்டு கவுன்சிலர் சந்திரமோகன் ஆகியோர்கள் மட்டுமே மனு செய்திருந்தனர் இவர்களைத் தவிரயாரும் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்யாததால் யூனியன் தலைவராக பொன் முத்தையா பாண்டியனும் துணைத்தலைவராக சந்திரமோகன் போட்டியின்றி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களை சேர்மனுக்கான இருக்கையில் அலுவலர்கள் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சேர்ந்து அமர வைத்தனர்.

பின்னர் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் மருதப்பன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பக விநாயகம், இராயகிரி குருசாமி, வாசு சரவணன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் விவசாய அணி மனோகரன், மருத்துவரணி டாக்டர் சுமதி, தொண்டர்கள் அணி மெடிக்கல் சுந்தர், இலக்கிய அணி முத்துசாமி, இளைஞரணி சரவணகுமார் விவசாய தொழிலாளர் அணி பூமிநாதன்,மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை இருக்கையில் அமரச்செய்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil