புளியங்குடி அருகே கார் மோதி தலைமை காவலர் பலி

விபத்தில் போலீஸ் தலைமை காவலர் உயிரிழப்பு
Latest Accident News -தென்காசி மாவட்டம், புளியங்குடி போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவு தலைமை காவலர் மருதுபாண்டியன், சேர்ந்தமரம் போலீஸ் ஸ்டேஷன் தலைமைக் காவலர் சுந்தரய்யா. இருவரும் நேற்று இரவு சொக்கம்பட்டி - புளியங்குடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனம், மின்சார வாரியம் சாலை அருகே சென்ற போது, பின்னால் வேகமாக வந்த இனோவா கார் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த தலைமை காவலர் சுந்தரய்யா உயிரிழந்தார். படுகாயங்களுடன் தனிப்பிரிவு தலைமை காவலர் மருதுபாண்டியன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சுந்தரய்யா 1997-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். அடுத்த மாதம் சிறப்பு உதவி ஆய்வாளராக பொறுப்பு ஏற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu