சங்கரன்கோவில் அருகே தொடர் மழையால் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிய சோகம்

சங்கரன்கோவில் அருகே தொடர் மழையால் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிய சோகம்
X

அழுகிய நெற்பயிர்களை காட்டும் விவசாயிகள்.

சங்கரன்கோவில் அருகே புளியங்குடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்த நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்து வந்த மழையினால் நவாச்சோலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் கடந்த மாதம் நடவு செய்த நெல்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. இதில் நெற்பயிர்கள் அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே தமிழக அரசு தண்ணீரில் மூழ்கிய நெல் நாற்றுகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.rainwater

Tags

Next Story
ai healthcare products