நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் வீட்டில் NIA சோதனை

நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் வீட்டில் NIA சோதனை
X

பட விளக்கம்: விஸ்வநாத பேரியில் உள்ள நாம் தமிழர் மாநில பொறுப்பாளர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் வீட்டில் NIA சோதனை நடைபெற்று வருகிறது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் இசை மதிவாணன். நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக உள்ள இவரது வீடானது விஸ்வநாதப் பேரி கிராமத்தில் உள்ள நிலையில் இவரது வீட்டில் தற்போது தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை முதல் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப் பேரி கிராமத்தில் உள்ள இசை மதிவாணன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பது வழக்கம். ஆனால் தற்போது நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் நடத்தி வரும் இந்த சோதனையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தற்போது தேசிய புலனாகிய முகமை அமைப்பினர் தீவிர சோதனையை மேற்கொண்டு வரும் நிலையில் சோதனையின் முடிவில் இந்த சோதனைக்கான காரணம் என்ன என்று தெரியவரும் என கூறப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!