சிவகிரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது

சிவகிரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது
X

சிவகிரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சிவகிரி தேவர் மகாசபை திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆகவே கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, சிவகிரி நகரப் பஞ்சாயத்தும், வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார மையமும் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய், சிவகிரி நகரப் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன் ஆகியோர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தனர் மேலும் அனைவருக்கும் சிவகிரி நகரப் பஞ்சாயத்து சார்பாக குழு பணியாளர்கள் மூலமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்