வாசுதேவநல்லூர் கரும்பு தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிப்பட்டது

வாசுதேவநல்லூர்  கரும்பு தோட்டத்தில்   மலைப்பாம்பு பிடிப்பட்டது
X

வாசுதேவநல்லூரில் கரும்பு தோட்டத்தில் மலைப்பாம்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த விவசாயி அய்யர் என்பவருக்கு புதுக்குளம் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டு தற்போது கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. கரும்பு வெட்டும் போது மலைப்பாம்பை கண்டுள்ளனர். உடனடியாக வாசுதேவநல்லுர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சேக்அப்துல்லா தலைமையில் தீயனைப்புத்துறையினர் விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் இருந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பகுதிக்கு கொண்டு சென்ஷறனர்.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!