கட்டபொம்மன் பிறந்தநாள் விழா: வாசுதேவநல்லூரில் அறக்கட்டளை சார்பில் கொண்டாட்டம்

கட்டபொம்மன் பிறந்தநாள் விழா: வாசுதேவநல்லூரில் அறக்கட்டளை சார்பில் கொண்டாட்டம்
X

வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்தநாள் விழா, வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது.

வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்தநாள் விழா வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது

வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்தநாள் விழா வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் ஓபிசி தலைவர் திருஞானம் நெற்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்கறிஞர் சங்கை கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி எம்எல்ஏ வுமான பழனி நாடார் பஸ்நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் புளியங்குடி நகர தலைவர் பால்ராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் மணிகண்டன், மூத்த காங்கிரஸ் தலைவர்மீரான், மாவட்ட துணைத்தலைவர் தேவேந்திரன், வட்டார விவசாய அணி தலைவர் முருகேசன், திமுகசெயலாளர் சரவணன், ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கட்டபொம்மன், மதிமுக நகர செயலாளர் கணேசன் மதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், வாசுதேவநல்லூர் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் செல்வம், தொழிற்சங்க தலைவர் பிரபாகரன், மாநில பேச்சாளர் சோ இராமசாமி, முன்னாள் கவுன்சிலர் கோட்டியப்பன், ராஜகம்பள நாயக்கர் சமுதாய நாட்டாண்மை நவநீதகிருஷ்ணன், பரமசிவன், பால்ராஜ், ஐயரப்பன், கட்டபொம்மன் இளைஞரணி தலைவர் தங்க முனியாண்டி, குருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai robotics and the future of jobs