கலைஞர் நூற்றாண்டு விழா! தென்காசியில் சிறப்பு மருத்துவ முகாம்!
தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு பதிவு செய்யும் முகாம் வாசுதேவநல்லூர் வட்டாரம் நகரம் ஊராட்சி ஒன்றிய ஜவஹர் நடுநிலைப்பள்ளியில் நடை பெற்றது.
முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வரவேற்புரை மருத்துவர்.முரளிசங்கர்,துணை இயக்குநர் (சுகாதார பணிகள்), மற்றும் மருத்துவர் பிரேமலதா இணை இயக்குநர்,(நலப்பணிகள்) திட்ட விளக்கவுரை ஆற்றினார்.
முன்னிலை மற்றும் சிறப்புரை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் M. குமார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர். சதன்திருமலைக்குமார் நகரம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதரமணிபாய்செல்வமுருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியர் அ விழா பேருரை ஆற்றினார்.
இம்முகாமில் ரத்தஅழுத்த,சிறுநீர்,எக்கோ, இசிஜி,மார்பக புற்றுநோய், தொழுநோய், காசநோய்,கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் முகாமும் பொது மருத்துவம் ,பொது அறுவை சிகிச்சை ,மகளிர் மருத்துவம், கண்மருத்துவம்,காதுமூக்குதொண்டை மருத்துவம், பல் மருத்துவம்,எலும்பியல் மருத்துவம்,மன நல மருத்துவம்,சித்த மருத்துவம் வழங்கி மருந்து, மாத்திரை சிகிச்சை வழங்கப்பட்டது.மேலும் இம்முகாமில் சங்கரன்கோவில் மற்றும் தென்காசி கோட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.வட்டார மருத்துவர் அலுவலர் மருத்துவர். திருமலை நன்றியுரை ஆற்றினார். முகாம்பில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உடலை பரிசோதனை செய்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu