ஜேசிபி ஆப்ரேட்டர்கள் தொழிலாளர்கள் கூட்டம்

ஜேசிபி ஆப்ரேட்டர்கள் தொழிலாளர்கள் கூட்டம்
X

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ஜேசிபி ஆப்ரேட்டர்கள் தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூர் வட்டார ஜேசிபி ஆப்ரேட்டர்கள் தொழிலாளர்கள் (சிஐடியூ) சங்க அமைப்பு கூட்டம் கிளைத் தலைவர் சந்தனம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியூ., மாவட்டசெயலாளர் வேல்முருகன் ,மாவட்ட பொருளாளர் தர்மராஜ் சிபிஎம், வட்டார செயலாளர் நடராஜன் கட்டுமான சங்க மாவட்ட துணைதலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று சங்கத்தின் நோக்கங்களையும், நலவாரிய பதிவு சம்மந்தமாக பேசினார்கள்.

தொடர்ந்து பல்வேறு பதிவுகளுக்கான புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர் அனைத்து தொழிலாளர்களையும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்வது , தமிழகஅரசு தொழிலாளர் நலவாரிய பதிவை எளிமைபடுத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொருளாளர் காளிராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story