உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை

உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சண்முகத்துரை உடலுக்கு கோட்டாட்சித் தலைவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அமைந்துள்ளது உள்ளார். இங்கு தென்காசி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சண்முகத்துரை (வயது – 52), என்பவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (16.10.2023) நேற்று சிகிச்சைக்காக திருநெல்வேலி, மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையின்போது மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததை தொடர்ந்து அவரது இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை அவரது குடும்பத்தினார் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

தமிழக அரசு உடல் உறுப்புகள் தானம் செய்யும் நபர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சண்முகத்துரை, உடலுக்கு (17.10.2023) இன்று மாலை 5.00 மணியளவில் இறந்தவரின் சொந்த ஊரான உள்ளார் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்கரன்கோவில், கோட்டாட்சித் தலைவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகர் பகுதி சார்ந்த கற்பகம் என்பவர் ஏற்கனவே உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில் தற்போது இரண்டாவது நபர் உடலுறுப்புகளை தானம் செய்துள்ளார்.

Tags

Next Story