வாசுதேவநல்லூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் வாகன ஓட்டிகள் அவதி

வாசுதேவநல்லூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் வாகன ஓட்டிகள் அவதி
X

வாசுதேவ நல்லூர் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

வாசுதேவநல்லூரில் தொடர்ந்து பெய்த மழையினால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆறுகளில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி உபரி நீராகி நகர்புறங்களுக்குச் செல்கின்றது.

இந்நிலையில் வாசுதேவநல்லூருக்கு மேற்கே உள்ள ஊருணி நிரம்பியதால் உபரி தண்ணீரானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுங்சாலையில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் அச்சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும் தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story