ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழப்பு

ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழப்பு
X

செல்லப்பாண்டி 

வாசுதேவநல்லூர் அருகே பனையூர் கிராமத்தில், ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்லப்பாண்டி; அவரது உறவினர் இறப்பு நிகழ்வில் கலந்து விட்டு, நிட்சோப நதி ஆற்றில் குளிக்கச் செல்லும்போது தண்ணீரின் வேகம் சுழற்சி உள்ளே இழுத்துச் சென்றதால் வெளியில் வரமுடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிருடன் மீட்க போராடிய உறவினர்கள், அவரை சடலமாக மீட்டனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீரின் வேகம் அதிகரித்து உள்ளது. வெள்ளப் பெருக்கில் சிக்கிய விவசாயி வாய்பேச இயலாதவர் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!