அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் -வாலிபர் கைது

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் -வாலிபர் கைது
X

சுகாதாரத்துறை ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லப விநாயகர் கோவில் அருகே சுகாதாரத்துறை ஊழியரான சுமித்ரா டெங்கு கொசு பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார், அப்போது பிரபாகரன் என்பவரின் வீட்டிற்குள் சோதனை செய்ய சென்ற போது பிரபாகரன் சுகாதாரத்துறை ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து அசிங்கமாக பேசி வீட்டிற்குள் வந்தால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதுகுறித்து சுமித்ரா புளியங்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு மாரியப்பன் என்பவரின் மகனான பிரபாகரன் (27) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai future project