தென்காசி-தடுப்பூசி போட்டாலும் வெளியில் நடமாட வேண்டாம்-ஆட்சியர் அறிவுரை

தென்காசி-தடுப்பூசி போட்டாலும் வெளியில் நடமாட  வேண்டாம்-ஆட்சியர் அறிவுரை
X

கொரோனா தடுப்பூசி போடுதல் (மாதிரி படம்)

ஊரடங்கு காலத்தில் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலும் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தென்காசி மாவட்டம், புளியங்குடி- காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்.திருமலைக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் துவக்கி வைத்து பேசினார்.

தமிழக அரசு கொரோனா வைரஸ் 2-ம் அலை தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் 2-ம் அலை தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தம் விதமாக பொதுமக்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமினை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேலபள்ளிவாசல் ஜமாத் கமிட்டி உறுப்பினர்கள் சிறப்பான கொரோனா தடுப்பூசி முகாமினை ஏற்பாடு செய்து பொதுமக்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டது பாதுகாப்பான அம்சமாகும்.

ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இம்முகாமினை நல்முறையில் பயன்படுத்தி, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும், தடுப்பூசி போடும் பொதுமக்கள் அனைவரும் தங்களது ஆதார் எண் அடையாள அட்டையுடன் வருகை தந்து கொரோனா தடுப்பூசியினைப் செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் தொடர்ந்து முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி அல்லது சோப்பு முலம் கைகளை அடிக்கடி கழுவியும் எவ்வித காரணமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவையான காய்கறிகள் தங்குதடையின்றி கிடைத்திடவும், காய்கறிகள் வாங்கும்போது பொதுமக்கள் சமுக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிகொள்ள வேண்டும். கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் அரசு எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென என அவர் தெரிவித்தார்.

இம்முகாமில் தென்காசி வருவாய் வட்டாட்சியர் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் குணசேகரன், புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார்சிங், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மேலபள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!