புளியங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம்

புளியங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

தென்காசி மாவட்டம், புளியங்குடி, T.N.புதுக்குடி R.C.சர்ச் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சிியர்டாக்டர் .சமீரன், பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்புப்பணி ஆலோசனை குழு உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா வைரஸ் 2-ம் அலை தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் கொரோனா வைரஸ் 2-ம் அலை தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தம் விதமாக பொதுமக்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்த தடுப்பூசி முகாமிற்கு 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண் அடையாள அட்டையுடன் வருகை தந்து தடுப்பூசியினைப் செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் தொடர்ந்து முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி அல்லது சோப்பு முலம் கைகளை அடிக்கடி கழுவியும் எவ்வித காரணமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டவர்கள் தனிக்கழிப்பறை பயன்படுத்த வேண்டும். கழிப்பறை வசதி இல்லாதவர்கள்; மருத்துவமனை அல்லது கொரோனா பாராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்கநர் (சுகாதாரப்பணிகள்) மரு.யோகானந்த், புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார்சிங், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொணடனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி