பூலித்தேவருக்கு நாணயம் வெளியிட வேண்டும்: பழனி நாடார் எம்எல்ஏ கோரிக்கை

பூலித்தேவருக்கு நாணயம் வெளியிட வேண்டும்: பழனி நாடார் எம்எல்ஏ கோரிக்கை
X

பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்.

மத்திய அரசு சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவருக்கு நாணயம் வெளியிட வேண்டும் என்று பழனி நாடார் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்

மத்திய அரசு மாமன்னர் பூலித்தேவரின் பெயரில் நாணயம் வெளியிட வேண்டும் என்று மாமன்னர் பூலித்தேவர் 309 -வது பிறந்த நாள் விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேட்டியளித்தார்.

இந்திய நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 309 வது பிறந்தநாள் விழா இன்று அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்றது விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னர் பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதன்படி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மாமன்னர் பூலித்தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து பூலித்தேவரின் நினைவு மாளிகையை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மாமன்னர் பூலித்தேவர் புகழ் இந்திய நாடே பேசுகின்ற அளவிற்கு அவரது புகழ் ஓங்கி வளர்ந்துள்ளது. எனவே மத்திய அரசு மாமன்னர் பூலித்தேவரின் நாணயம் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!