தோட்டத்தில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே, 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில், மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதை பார்த்த அவர், சிவகிரி வனச்சரகர் சுரேஷுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், கரும்புத் தோட்டத்தில் இருந்த, பதினைந்து அடி நீளமுள்ள மலைபாம்பை பத்திரமாக பிடித்து, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இச்சம்பவம், அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!